[X] Close

விலை சரிவில் பெட்ரோல், டீசல்


petrol-price-down

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 10:01 am
  • அ+ அ-

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் பெட்ரோலியப் பொருள்களின் விலையும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்வரை பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துவந்தது. லிட்டர் பெட்ரோல் ரூ. 85-90 வரையிலும் உயர்ந்தது. இதனால் வாகனஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். வாகன விற்பனையும் இதனால் மந்தமாகிவிட்டதாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கூறின.

இந்த நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்துகுறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிவைச் சந்தித்துவருவதால் இந்திய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனங்கள் பெட்ரோல், டீசல்விலையைக் கணிசமாகக் குறைத்துள்ளன. பேரல் கச்சா எண்ணெய் 86 டாலரிலிருந்து தற்போது 70 டாலருக்குக் குறைந்துள்ளது. இந்தியன் ஆயில் வெளியிட்ட விவரங்கள்படி நேற்று பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமையைக் காட்டிலும் 17 பைசா குறைந்து ரூ. 77.89க்கு விற்பனையானது. ஆனால், விலை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்தது. அதிகபட்சமாக மும்பையில் ரூ. 83.40க்கும், கொல்கத்தாவில் ரூ. 79.81க்கும், சென்னையில் ரூ. 80.90க்கும் விற்பனையானது. மும்பையில் டீசல் லிட்டர் ரூ.76.05க்கும் விற்கப்பட்டது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close