[X] Close

‘எதிரி பங்குகள்’ விற்பனை மூலம் ரூ.3,000 கோடி: மத்திய அமைச்சரவை அனுமதி


parliament-news

  • kamadenu
  • Posted: 10 Nov, 2018 16:35 pm
  • அ+ அ-

எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை மற்றும் இந்தியா-சீனா போருக்குப் பின்னர் இந்தியாவில் வசித்து வந்த பாகிஸ்தான் மற்றும் சீன நாட்டினர் பலர் தங்கள் நாடுகளில் குடியேறி விட்டனர். அவர்கள் இந்தியாவில் விட்டுச்சென்ற சொத்துகள் மற்றும் பங்குகள் ‘எதிரி சொத்துகள்’ என அழைக்கப்படுகின்றன. இவை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இவற்றில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.3,000 கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

எதிரி சொத்துகள் இந்தியாவில், வீடு, நிலம், பங்குகள் என பல வகைகளான உள்ளன. இவற்றை எதிரி சொத்துகள் சட்டம் 1968-ன் கீழ் இந்தியா நிர்வகித்து வருகிறது. இந்த சொத்துகளை விற்பதற்கு கடந்த ஆண்டே சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து சென்றவர்களின் சட்டபூர்வ வாரிசுகள் மற்றும் இந்திய குடிமகன்கள் இந்த சொத்துகளை விற்பதற்கு சட்டம் கடுமையாக்கப்பட்டன.

இந்த நிலையில் மத்திய அமைச்சரவை இந்த சொத்துகளை விற்பது தொடர்பான முடிவினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் எதிரி சட்டத்தின் கீழ் 996 நிறுவனங்களின் 20,323 பங்குதாரர்களின் சொத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 588 நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் 139 நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

தற்போதைய அனுமதி மூலம், பயன்பாட்டில் இல்லாத எதிரி சொத்துகள் விற்பனை செய்யப்படும். இதன் மூலம் திரட்டப்படும் தொகை சமூக நலத் திட்டங்களுக்கு செலவிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு இந்த முக்கிய முடிவினை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ரூ.1 லட்சம் கோடி என்கிற கடுமையான நிதி திரட்டல் இலக்கினை மத்திய அரசு வைத்துள்ளது. தற்போது எதிரி சொத்துகள் விற்பனையும் அரசின் பங்கு விலக்கல் நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், எதிரி சொத்துகளை விற்பனை செய்வதன் மூலம் இந்தியாவின் சமூல நலத்திட்டங்களுக்கு செலவிடுவது அதிகரிக்கும் என்றார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close