[X] Close

கடன் வளர்ச்சியை ஊக்கப்படுத்த ரூ.3.6 லட்சம் கோடி: ஆர்பிஐ கையிருப்பு தொகையை கேட்கும் மத்திய அரசு


reserve-bank

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 09:06 am
  • அ+ அ-

ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தொகையில் ரூ.3.6 லட்சம் கோடியை கேட்டு மத்திய அரசு நெருக்குதல் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வங்கிகளின் கடன் வளர்ச்சியை ஊக்கப் படுத்த கடன் கொள்கையை தளர்த்த வேண் டும் எனவும் மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக சில அரசு அதிகாரிகள் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் கைவசம் ரூ. 9.6 லட்சம் கோடி இருப்புத் தொகை உள் ளது. இதில் மூன்றில் ஒரு பங்கினை அரசுக்கு டிவிடெண்டாக அளிக்க வேண்டும் என மத்திய அரசு நெருக்குதல் கொடுத்து வரு வதாகக் கூறினர்.

ரிசர்வ் வங்கியுடனான மோதல் காரண மாக, ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை அரசு கையிலெடுக்க உள்ளதாகவும், இதுவரை யாரும் பயன்படுத்தாத ரிசர்வ் வங்கி சட்டம் 7-ஐ பயன்படுத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. கடன் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்தினை போக்கும் விதமாக விதிமுறைகளை தளர்த்துவது, வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் பணப் புழக்கத்தை அதிகரிப்பது மற்றும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பை மாற்றிக் கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த விவகாரங்களில் ரிசர்வ் வங்கிக்கு மாற்று கருத்து உள்ளதால் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மத்திய அரசு நிதிக் கொள்கை களில் டி20 கிரிக்கெட்போல குறுகிய கால தேவைகளுக்கு யோசிக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கி நீண்ட கால நோக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்போல கையாள்கிறது. ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்பட வில்லை எனில் இந்தியா மோசமான பொரு ளாதார நெருக்கடிகளை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முடிவு எட்டப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஈவுத் தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரூ.50 ஆயிரம் கோடியை ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு வழங்க உள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உபரியாக இருக்கும் ரூ.3.60 லட்சம் கோடியை தருமாறு மத் திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பணத்தின் மூலம் அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைத்துக் கொள்ள மத்திய அரசு முயற்சிக்கிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி மறுத்து வருகிறது. எனினும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக் கையில், ரிசர்வ் வங்கியின் தற்போதைய இருப்புத் தொகையை அப்படியே பராமரித் தால்தான் நிதிநிலை ஸ்திரமாக இருக்கும் என கூறியுள்ளது.

தவிர ரிசர்வ் வங்கி வாராக்கடன் வசூலிக் கும் நடவடிக்கைகளில் தீவிரமாக உள்ளது. வாராக்கடனால் மோசமாக பாதிக்கப்பட்ட வங்கிகள் மீது பிசிஏ (Prompt Corrective Action ) விதிமுறைகள்படி நடவடிக்கைகள் எடுத்துள்ளது. வாராக்கடன் கடனாளிகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என வங்கிகளுக்கு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. இந்த நிலையில் கடன் வளர்ச்சியை அதிகரிக்க வங்கிகளின் விதி முறைகளை எளிதாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது என்றும் அதிகாரிகள் கூறினர்.

வீரல் ஆச்சார்யா பொது நிகழ்ச்சியில் அரசை விமர்சித்த நிலையில், ரிசர்வ் வங்கி யின் தனிப்பட்ட விவகாரங்களை பொது நிகழ்ச்சியில் பேசியது குறித்து இயக்குநர் குழுவில் இருக்கும் நியமன இயக்குநர் குருமூர்த்தி கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள இயக்குநர் குழு கூட்டத்தில் உர்ஜித் படேல் பதவி விலகும் முடிவில் உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி என்பது, காரில் சீட் பெல்ட் இருப்பதைப் போன்றதாகும், விபத்துநேரத்தில் உயிர்காக்கும் கருவி யாகச் செயல்படும். ஆதலால், அதன் சுயாட்சியை மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சூழலுக்கு ஏற்ப ரிசர்வ் வங்கி முடிவு எடுக்க வேண்டும். சில நேரங்களில் மத் திய அரசின் நெருக்கடி நாட்டு நலனுக்குச் சரியில்லாததாக இருந்தால், அதை மறுக் கவும், முடியாது என்று கூறவும் ரிசர்வ் வங்கிக்கு முழு சுயாட்சி அதிகாரமும், பொறுப்பும் உண்டு. ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவு என்பது நீண்டகாலமாகவே சிறப் பானதாக இருந்ததில்லை. அதனால், முடிவு கள் நாட்டின் நலனுக்கும், நிதிச் சூழலுக்கும் உகந்ததாக இல்லாவிடில் அதற்கு மறுப்பு சொல்வது என்பது புதிதல்ல.

துணை கவர்னர்களையும், கவர்னரையும் நியமிப்பது மத்திய அரசுதான். அவ்வாறு நியமித்தபின், அவர்கள் சொல்லும் அறிவுரைகளை மத்தியஅரசு கேட்க வேண்டும். நாட்டின் நிதிப்பாதுகாப்புக்காக நியமித்துள்ள அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close