[X] Close

டிஜிட்டல் இன்வெர்ட்டர் வாஷிங்மெஷின்: சாம்சங் அறிமுகம்


new-washing-machine-from-samsung

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 08:52 am
  • அ+ அ-

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான சாம்சங் புதிய டிஜிட்டல் இன்வெர்ட்டர் வாஷிங்மெஷின்களை அறிமுகம் செய்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் மின்னணு உபயோகப் பொருட்கள் பிரிவின் துணைப் பொது மேலாளர் மணீஷ் ஷர்மா கூறுகையில், இந்தியாவில் ஆண்டுக்கு 65 லட்சம் சலவை இயந்திரங்கள் விற்பனையாகின்றன. இந்த பிரிவின் ஆண்டு வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி சந்தை மதிப்பு கொண்டுள்ள பிரிவாகும். குறிப்பாக சாம்சங் வாஷிங் மெஷின்கள் சந்தை வளர்ச்சியை விட அதிகமாக விற்பனையா கின்றன. நடப்பு பண்டிகை காலத் தில் விற்பனை மேலும் 2 சதவீதம் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

10 மாடல்கள்

மின்னணு வீட்டு உபயோகப் பிரிவில் தொடர்ச்சியாக புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டுவரும் சாம்சங், இந்த ஆண்டில் வாஷிங் மெஷின் பிரிவில் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் தொழில் நுட்பத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் 40% மின்சார பயன் பாடு குறையும். சலவைத் திரவம் அல்லது தூளை சரியாக கலப்பதற்காக வாட்டர் ஜெட் என்கிற வசதியும் இருக்கும். 6.5 கிலோ முதல் 16 கிலோ வரையில் 10 மாடல்களை தற்போது அறிமுகம் செய்துள்ளோம். இவற் றின் விலை ரூ.24,500 முதல், ரூ.49,000 வரை இருக்கும் என்றும் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close