[X] Close

பிஎஸ்என்எல் விழாக்கால தள்ளுபடி திட்டம்


bsnl-offer

  • kamadenu
  • Posted: 21 Oct, 2018 09:36 am
  • அ+ அ-

பிஎஸ்என்எல் நிறுவன வாடிக்கை யாளர்கள் விழாக்கால சிறப்பு திட்டத்தை பயன்படுத் திக் கொள்ளுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவன தருமபுரி தொலைதொடர்பு மாவட்ட பொதுமேலாளர் வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் சார்பில் விழாக்கால சிறப்பு திட்டமான தனலட்சுமி புராஜக்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நவம்பர் 7-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தின்படி, பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை சலுகை காலத்தில் செலுத்தினால் ஜிஎஸ்டி நீங்கலான மீதி கட்டணத்தில் 1 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். அதேபோல, லீஸ்டு லைன் சந்தாதாரர்கள் செலுத்தும் கட்டணத்தில் 2 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும். 5 மாத கட்டணத்தை முன் பணமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 3 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இந்த தள்ளுபடி அடுத்த பில்லில் வழங்கப்படும். எனவே, தருமபுரி தொலைதொடர்பு மாவட்டத்தைச் சேர்ந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். சிறப்புத் திட்டம் அமலில் உள்ள தேதி வரை தினமும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் அனைத்தும் செயல்படும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close