[X] Close

இந்தியாவின் முதல் பிஎஸ் 6 கார்: மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம்


india-s-first-bs6-car-mercedes-benz-introduction

  • Team
  • Posted: 27 Feb, 2018 06:00 am
  • அ+ அ-

இந்தியாவின் முதல் பிஎஸ் 6 விதிகளைக் கொண்ட டீசல் காரை மெர்சிடஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இது எஸ்-கிளாஸ் வரிசையில் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டதாகும். புதிய எஸ் 350டி கார் பாரத் 6 விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ், ஏற்கெனவே ஆட்டோ எக்ஸ்போவில் புதிய மேபாக் எஸ் 650 மற்றும் எஸ் 560 கார்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ.2.73 கோடி மற்றும் ரூ.1.94 கோடியாகும்.

வாகனங்களால் உருவாகும் புகை மாசுபாட்டை குறைக்கும் விதமாக, மாசு கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்ட பாரத் ஸ்டேஜ் 6 விதிகளை இந்தியா 2020-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்த உள்ளது. அந்த விதிகளுக்கு ஏற்ப பென்ஸ் நிறுவனம் தற்போது டீசல் காரை தயாரித்துள்ளது.

எஸ்-கிளாஸ் வரிசையில், மேம்படுத்தப்பட்ட ஸ்போர்ட்ஸ் மாடல் பம்பர், மறு வடிவமைக்கப்பட்ட எல்இடி முகப்பு விளக்கு என முற்றிலும் புதிய தோற்றத்தினை அளிக்கிறது. புதிய வகையிலான பக்கவாட்டு எல்இடி, அலாய் சக்கரம் கொண்டுள்ளது.

12.3 அங்குல தொடு திரை கட்டுப்பாட்டு சிஸ்டம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட டேஷ்போர்டு, டிரைவிங் மாடல்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் டிஎப்டி ஸ்கிரீன் என பல அம்சங்கள் இந்த எஸ்-கிராஸ் மாடலில் உள்ளன. எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சீட் சிஸ்டம், நான்கு வகையிலான கிளைமேட் கன்ட்ரோல் முறை உள்ளது. இன்ஜின் ஆறு சிலிண்டர்களைக் கொண்டது. இந்தியாவில் பிஎம் டபிள்யூ 7 சீரிஸ், ஆடி 8, ஜாகுவார் எக்ஸ்ஜேஎல் மற்றும் லெக்ஸஸ் எல்எஸ் கார்களுக்கு போட்டியாக இந்த காரை பென்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. எஸ் 350டி மற்றும் எஸ் 450 என்கிற இந்த கார்களின் விற்பனையக விலை ரூ.1.33 கோடியாகும்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close