[X] Close

பியூச்சர் ரீடெய்லின் 8 சதவீத பங்குகளை வாங்கும் அமேசான்?


amazon-sales

  • kamadenu
  • Posted: 17 Oct, 2018 11:39 am
  • அ+ அ-

இ-காமர்ஸ் சந்தையில் முன்னணி நிறுவனமான அமேசான், சில்லரை வர்த்தக நிறுவனமான பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் 7 முதல் 8 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியாகி யுள்ள செய்தியில், இந்த நட வடிக்கை ரொக்க மற்றும் பங்கு பரிமாற்றமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நட வடிக்கை இறுதி கட்டத்தில் உள்ள தாகவும், சுமார் ரூ. 2,500 கோடி (338 மில்லியன் டாலர்) மதிப்புக்கு பரிமாற்றம் நடைபெற உள்ளது என்றும், அடுத்த இரண்டு வாரங் களில் ஒப்பந்தம் கையெழுத்தா கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில், பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் 10 சதவீத பங்கு களை வாங்குவதற்கான பேச்சு வார்த்தையில் அமேசான் ஈடு பட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கின. பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத் தின் பங்குகளை வாங்குவதில் கூகுள் மற்றும் பேடிஎம் நிறு வனங்களும் போட்டியில் இருந் தன.

இந்திய சந்தையை கைப்பற்று வதில் அமேசான் மற்றும் பிளிப் கார்ட் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. பிளிப் கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட் முதலீடு செய்துள்ளது. தற்போது அமேசான் நிறுவனம் பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் பங்குகளை வாங்க உள்ளது.

அமேசான் நிறுவனம் கடந்த மாதத்தில் ஆதித்யா பிர்லா குழுமத்தின் மோர் சில்லரை வர்த்தக நிறுவனத்தை ரூ.4,200 கோடிக்கு கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close