[X] Close

ஏர்செல் சேவை முடக்கம்: 10 லட்சம் பேர் வோடபோனுக்கு மாற்றம்; 2 லட்சம் பேர் பிஎஸ்என்எல்-க்கு மாறினர்


aircel-bsnl-vodafone

கோப்புப் படம்.

  • kamadenu
  • Posted: 13 Mar, 2018 21:14 pm
  • அ+ அ-

 

தமிழகத்தில் ஏர்செல் சேவை முடங்கியதன் காரணமாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கும், 2 லட்சம் பேர் பிஎஸ்என்எல்-க்கும் மாறியுள்ளனர். 

கடந்த ஒரு மாதமாக ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கி உள்ளது. இதனால், அந்நிறுவன வாடிக்கையாளர்கள் எம்என்பி முறையில் தங்களது எண்களை மாற்றாமல் பிற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். 

தமிழகத்தில் 4ஜி நெட்வொர்க்கை மேம்படுத்த வோடபோன் நிறுவனம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக ரூ.400 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
இதனால், ஏர்செல் நிறுவனத்தின் திவால் அறிவிப்புக்குப் பின், வோடவோன் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் 10 லட்சம் பேர் மாறியுள்ளதாக வோடபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இம்மாதத்தில் மட்டும் 11 நாட்களில் சுமார் 2 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர்.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகாரி ஒருவர் கூறுகையில், ''பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரையிலான காலத்தில் சுமார் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ளனர்'' என்று அவர் கூறியுள்ளார். 

இதை மிஸ் பண்ணாம படிங்க!

அஜித்தின் ‘விசுவாசம்’ படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்குமா?

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close