[X] Close

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்: இது 7-வது முறை!


mukesh-ambani-tops-barclays-rich-list

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Sep, 2018 17:04 pm
  • அ+ அ-

இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். 831 பேர் கொண்ட பட்டியலில் முகேஷுக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. பார்க்ளேஸ் மற்றும் ஹூரன் (Barclays Hurun India Rich List 2018) பட்டியலில் இது வெளியாகியுள்ளது.

பார்க்ளேஸ் ஆகியவை நிதிச்சேவை நிறுவனமாகும். இது  ஹூரன் என்ற ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து  இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.1,000 கோடி அளவிற்கு கொண்ட 831 இந்தியர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் அவர் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

முகேஷ் அம்பானியை அடுத்து எஸ்.பி. இந்துஜா மற்றும் குடும்பத்தினர், எல்.என். மிட்டல் மற்றும் குடும்பத்தினர், விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி மற்றும் சன் பார்மாசூட்டிக்கல்ஸ் அதிபர் திலீப் சாங்வி ஆகியோர் உள்ளனர்.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.₹371,000 கோடியாகும். இந்துஜாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 59,000 கோடி. எல்.என்.மிட்டலின் சொத்து மதிப்பு ரூ.1,14,500 கோடி. அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு ரூ.96,100 கோடி.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக நீடிக்கும் முகேஷ் அம்பானி, போர்ப்ஸ் வெளியிட்ட சர்வதேச மெகா பணக்காரர்கள் பட்டியலில் 19-வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close