[X] Close

சந்தையில் புதுசு: டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதியுடன் நெக்ஸ்ட் ஜென் ஆர்.ஓ


next-gen-ro

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Sep, 2018 12:02 pm
  • அ+ அ-

குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் முன்னணி நிறுவனமான கென்ட் தனது புதிய மேம்படுத்தப்பட்ட தயாரிப்பினை அறிமுகம் செய்துள்ளது. `நெக்ஸ்ட் ஜென் ஆர் ஓ’ என்கிற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பு கருவி டிஜிட்டல் டிஸ்ப்ளே வசதியுடன் உள்ளது.

நிறுவனத்தின் தலைவர் மகேஷ் குப்தா கூறுகையில், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளில் பல பிராண்டுகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் இருந்தாலும் 25 சதவீத சந்தையை கென்ட் வைத்துள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 50 சதவீதமாக உள்ளது. உயர்தரமான குடிநீர் சுத்திகரிப்பு கருவி என்கிற வகையில் சர்வதேச தரச் சான்றுகளைப் பெற்றுள்ளோம். ஒருமுறை சுத்திகரிக்கப் பட்டகுடிநீர் 100 சதவீதம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யும் புதிய தயாரிப்பினை கொண்டு வந்துள்ளோம்.

சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்படுத்தாமல் இருந்தாலும் யுவி தொழில்நுட்பம் நீரில் உள்ள பாக்ட்ரீயாக்களை நீக்கும். பில்டர்களின் ஆயுள், நீரில் உள்ள கனிமங்கள், நீரின் அழுத்தம் போன்றவற்றைக் காட்டும் எல்இடி டிஸ்பிளே வசதியும் கொண்டிருக்கும். விரைவில் நொய்டாவில் எங்களது இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளோம் என்றும் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close