[X] Close
 

வாகன ஓட்டிகளே இன்பச் செய்தி: கார், டூவீலர்களுக்கு ‘தேர்டுபார்ட்டி’ இன்சூரன்ஸ் குறைப்பு


good-news-for-drivers

  • Team
  • Posted: 10 Mar, 2018 15:21 pm
  • அ+ அ-

புதுடெல்லி,

கார், டூவீலர் வைத்து இருப்பவர்கள் அனைவரும் வைத்திருக்கும் ஆவணங்களில் முக்கியமானது, ஆர்சி புக், இன்சூரன்ஸ். அதிலும், இன்சூரன்ஸில் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்பது வாகனம் ஓட்டுபவரையும், விபத்தின்போது இலக்காகுபவரையும் காக்க இது உதவும்.  

அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளாக கார், டூவீலர்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைத்து இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்(ஐஆர்டிஏஐ) உத்தரவிட்டுள்ளது.

2018-19ம் ஆண்டுக்கான டூவீலர், கார்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணத்தை காப்பீடு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  எத்தனை பேர்காப்பீடு கோருகிறார்கள், இழப்பு ஏற்படுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த கட்டண முறை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இன்சூரன்ஸ் கட்டணம் 1000 சிசி முதல் 1500 சிசி திறன் உடைய கார்களுக்கு 28 சதவீதம் உயர்த்தப்பட்டு இருந்த நிலையில் இப்போது குறைக்கப்பட்டுள்ளது.  இதன்படி 1000 சிசி திறனுக்கு அதிகம் இல்லாத கார்களுக்கு தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.1,850 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.2,055 ஆக இருந்தது.

டூவீலர்களைப் பொறுத்தவரை 75சிசி திறனுக்கு மிகாமல் இருக்கும் வாகனங்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.427 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன் ரூ.569 ஆக இருந்தது.

75 சிசி முதல் 150 சிசி திறன் உடைய டூவீலர்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் கடந்த ஆண்டு இருந்த ரூ.720 என்ற அளவில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

1000 சிசி முதல் 1500 சிசிக்குள் இருக்கும் தனிமனிதர்கள் பயன்படுத்தும் கார்களுக்கான தேர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் கட்டணம் ரூ.2,863 ஆக இருக்கிறது. இது கடந்த ஆண்டு கட்டணத்தில் இருந்து மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. அதேசமயம், 1500 சிசிக்கு அதிகமாக இருக்கும் கார்களுக்கான இன்சூரன்ஸ்கட்டணம் ரூ.7,890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரக்கு வாகனங்களைப் பொறுத்தவரை, 7500 கிலோ முதல் 12 ஆயிரம் கிலோ, 12 ஆயிரம் கிலோ முதல் 20 ஆயிரம் கிலோ, 20 ஆயிரம் கிலோ முதல் 40 ஆயிரம் கிலோ எடைக்கு மேல் சுமக்கும் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ்கட்டணத்தில் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் செயல்படுத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


[X] Close