[X] Close

கடன் வாங்கினா திருப்பி கட்டுங்க: 9 மாதங்களில் ரூ. ஒரு லட்சம் கோடி வாராக்கடன்


loan-for-people

  • Team
  • Posted: 09 Mar, 2018 15:33 pm
  • அ+ அ-

புதுடெல்லி

அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் அதை செலுத்தாதவர்கள்  எண்ணிக்கை 1.66 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் வாராக்கடன் ரூ.1,10,050 கோடியாக உயர்ந்துள்ளது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா எழுத்து மூலம் அளித்த ப திலில் கூறியிருப்பதாவது:

அரசு வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும், அதை செலுத்தாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.66 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, 9ஆயிரத்து 63 பேர் கடனை திருப்பிச்செலுத்தாமல் இருக்கிறார்கள்.

இவர்கள் மூலம் கடந்த 9 மாதங்களில் மட்டும் வாரக்கடன் ஏறக்குறைய ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 50 கோடியாக அதிகரித்துவிட்டது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடனை திரும்ப வசூலிக்கவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக திவால்சட்டம் கொண்டுவரப்பட்டு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017ம்ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிவரை கடனை திருப்பிச் செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பிச் செலுத்தாத 2 ஆயிரத்து 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 462 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு கேள்வியில் கடந்த 2016ம்ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 5 ஆண்டுகளில் அரசு வங்கிகள் ஏறக்குறைய ரூ.2.30லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- பிடிஐ

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close