[X] Close

ஆட்டோமொபைல் விற்பனை சரிவுக்கு கவலைப்பட வேண்டாம்; ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வளர்ச்சி சிறப்பாக உள்ளது: தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தகவல்


  • kamadenu
  • Posted: 14 Jul, 2019 08:06 am
  • அ+ அ-

ஆட்டோமொபைல் துறையில் காணப்படும் விற்பனை சரிவு குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. இது ஒன்றும் பொருளாதார சரிவின் அபாயகரமான சமிக்ஞை அல்ல என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறினார்.

பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்டோமொபைல் துறை என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஒரு அங்கம். ஒட்டுமொத்த உற்பத்தித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு கணிசமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. 2009-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் வேலை குறைப்பு நடவடிக்கையை எடுக்க உள்ளனர். கார் மற்றும் இரு சக்கர வாகன உற்பத்தி சரிந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும். உருக்கு துறை மற்றும் பிற துறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள விற்பனை சரிவு பற்றி கவலைப்பட தேவையில்லை என்று சுப்ரமணியன் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசும் முன்பு இந்திய வணிகவியல் மையத்தில் பேசிய அவர், மாநில அரசுகள் ராஜஸ்தான் மாநிலத்தில் பின்பற்றப்பட்டுள்ள தொழிலாளர் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே அங்கு 100 பணியாளர்களுக்கும் அதிகமான எண்ணிக்கை கொண்ட தொழிற்சாலைகள் அதிகம் தொடங்கப்பட்டுள்ளன என்றார். ராஜஸ்தானில் தொழில் உற்பத்தி பெருகிஉள்ளதோடு வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

2004-ம் ஆண்டு முதலில் ராஜஸ்தான் மாநிலத்தில்தான் தொழிலாளர் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து பிற மாநிலங்களிலும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1947-ம் ஆண்டைய தொழில் நிறுவன தாவா சட்டம், 1948-ம் வருடத்திய நிறுவன சட்டம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், 1961-ம் ஆண்டைய தொழில் பழகுநர் (அப்ரன்டிஸ்) சட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பிற மாநிலங்களிலும் இதுபோல தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க ஏதுவாக தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close