[X] Close

2006-2016 வரையிலான பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்பு


2006-2016-27

  • kamadenu
  • Posted: 13 Jul, 2019 08:38 am
  • அ+ அ-

2006 முதல் 2016 வரையிலான பத்து ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவில் 27 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீட்கப் பட்டு இருப்பதாக ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

ஐநா அபிவிருத்தி திட்டம், ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி ஆகிய அமைப்புகள் ஆய்வு மேற் கொண்டு உருவாக்கிய பல பரிமாண ஏழ்மை அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியை மட்டும் அடிப்படையாகக் கொள் ளாமல் சுகாதாரமான சூழல், நல்ல வேலை, சமூக பாதுகாப்பு, கல்வி, மருத்துவம் போன்ற வாழ்வின் அடிப்படை அம்சங்களின் அடிப் படையில் பல்பரிமாண ஏழ்மை வகைப்படுத்தப்படுகிறது.

101 நாடுகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. குறைந்த வருவாய் உள்ள 31 நாடு கள், நடுத்தர வருவாய் உடைய 68 நாடுகள், அதிக வருவாய் உள்ள 2 நாடுகள் என மொத்தம் 101 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏழ்மை நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் 10 நாடுகளில் குறிப்பிடத் தக்க அளவில் ஏழ்மைக் குறைப்பு நடந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியா, பங் களாதேஷ், காங்கோ, எத்தியோப் பியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, வியட்நாம், கம்போடியா, ஹைதி போன்றவை அந்த பத்து நாடுகள் ஆகும்.

இந்தியாவில் மட்டும் 27 கோடி மக்கள் 2006 முதல் 2016 வரையி லான காலகட்டத்தில் ஏழ்மை நிலையிலிருந்து மீண்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில், 2005-06 கால கட்டங்களில் 0.283 ஆக இருந்த பல்பரிமாண ஏழ்மைக் குறியீட்டு எண், 2015-16 ஆண்டுகளில் 0.123 ஆக குறைந்துள்ளது. 2005-06 காலகட்டங்களில் இந்தியாவில் 64 கோடி மக்கள் அடிப்படை வசதியற்ற, ஆரோக்கியச் சூழ லற்ற ஏழ்மை நிலையில் இருந் தனர். 2015-16 காலகட்டங்களில் அவ்வகையான ஏழ்மை நிலை யில் உள்ள மக்களின் எண் ணிக்கை 37 கோடியாகக் குறைந் துள்ளது. இந்தப் பத்து ஆண்டு களில் மட்டும் 27 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து மீட்கப் பட்டு உள்ளார்கள்.

2005-06 ஆண்டுகளில் 44.3 சதவீதமாக இருந்த போதிய ஊட் டச்சத்து கிடைக்காமல் இருந்த மக்களின் எண்ணிக்கை, 2015-16 ஆண்டுகளில் 21.6 சதவீதமாக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு 4.5 சதவீதத்திலிருந்து 2.2 சதவீத மாகவும், சமையல் எரிவாயு இல் லாதவர்களின் எண்ணிக்கை 52.9 சதவீதத்திலிருந்து 26.2 சதவீதமாக வும், சுகாதாரமான வாழ்விடம் இல்லாதவர்களின் எண்ணிக்கை 50.4 சதவீதத்திலிருந்து 24.6 சத வீதமாகவும், சுத்தமான குடிநீர் கிடைக்காதவர்களின் எண் ணிக்கை 16.6 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகவும் 2006 முதல் 2016 வரையிலான பத்து ஆண்டு களில் குறைந்துள்ளது.

மேலும், மின்சார வசதி கிடைக் காமல் இருந்தவர்களின் எண் ணிக்கை 29.1 சதவீதத்திலிருந்து 8.6 சதவீதமாகவும், தங்குவதற்கு வீடு இல்லாமல் இருந்தவர் களின் எண்ணிக்கை 44.9 சதவீதத் திலிருந்து 23.6 சதவீதமாகவும் குறைந்திருப்பதாக அந்தக் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 10 நாடுகளிலும் ஏழ்மை நிலை சம விகிதத்தில் குறைக்கப் படவில்லை. இருந்தபோதிலும், ஏழ்மை நீக்கத்துக்கான முன்னேற் றங்களை அங்கு காண முடிகிறது. இந்த 10 நாடுகளிலும் நகரங்களை விட கிராமங்களிலே அதிக வறுமை காணப்படுகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close