[X] Close

கடும் கடன் சுமையில் அனில் அம்பானி: ரூ.21,700 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்க முடிவு


21-700

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 08:36 am
  • அ+ அ-

கடும் கடன் சுமையில் இருக்கும் அனில் அம்பானி, அவருடைய ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் கடன்களை அடைப்பதற்காக ரூ.21,700 கோடி சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளார்.

கடன்களை அடைப்பதற்கு தேவையான நிதியை திரட்ட, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒன்றான ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் நிறுவனம், அதற்கு ஒப்பந்தமாகி இருந்த 9 சாலை திட்டங்களை விற்க இருக்க இருக்கிறது. இதன் மூலம் ரூ.9,000 கோடி அளவில் நிதி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக அனில் அம்பானியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இது தவிர்த்து, ரிலையன்ஸ் கேபிடல், அதன் வானொலி நிலை யத்தை விற்பதன் மூலம் ரூ.1,200 கோடி நிதியும், வணிகத்தில் இருக் கும் அதன் நிறுவனங்களின் பங்கு களை பணமாக்குவதன் மூலம் ரூ.11,500 கோடி அளவுக்கு நிதியும் திரட்ட அனில் அம்பானி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து கடன் சுமை அதி கரித்து வந்த நிலையில், பல்வேறு சொத்துகளை விற்று கடந்த 14 மாதங்களில் மட்டும் ரூ.35,000 கோடி அளவுக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் கடன்கள் அடைக் கப்பட்டுள்ளன. இருந்தும் ரூ.93,900 கோடி அளவிலான கடன்கள் இன்னும் மீதம் இருக்கின்றன.

கடந்த மாதம் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தை தணிக்கை செய்து வந்த பிடபிள்யூசி தணிக்கை நிறு வனம், அனில் அம்பானி தரப்பில் இருந்து முறையான ஒத்துழைப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி தனது தணிக்கை பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டது. மேலும், நிறுவனங்களுக்கு மதிப்பீடு அளிக்கும் பல்வேறு அமைப்புகள் கடன் அதிகரிப்பு காரணமாக அனில் அம்பானியின் நிறுவனங்களுக்கு குறைந்த மதிப்பீடுகள் அளித்தன. அதைத் தொடந்து அனில் அம்பானியின் நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் மேலும் சரியத் தொடங்கின. 2017ம் ஆண்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சொத்துகளை முகேஷ் அம் பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறு வனத்துக்கு விற்பதற்கான உடன் படிக்கை ஒப்பந்தமானது. ஆனால் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அந்த ஒப்பந்தம் ரத்து ஆனது. முறை யான நேரத்தில் சொத்துகளை விற்று கடன்களை அடைக்காததே அனில் அம்பானி தற்போது எதிர் கொள்ளும் பெரும் சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையால் ரிலை யன்ஸ் குழும நிறுவனங்களின் கடன் சுமை குறையும் என்று அனில் அம்பானியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close