[X] Close

நாட்டின் திட்ட செலவுகளை பாதிக்காத வகையில் நிதி பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்படும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:26 am
  • அ+ அ-

-,

நாட்டின் திட்ட செலவுகளை பாதிக்காத வகையில் நிதிப் பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை அளவு 3.4 சதவீதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய பட்ஜெட்டில் அது 3.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று மக்களைவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். 2019-20 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை அளவு 3.3 சதவீதமாக இருக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அவர் கூறினார். வேளாண் துறை சார்ந்த 22 பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசு உயர்த்திஉள்ளது. மேலும், மின்சார வாகனங்களுக்கான ஜிஸ்எஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அவர், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.100 லட்சம் கோடி அளவில் அரசு முதலீடு செய்ய உள்ளது. 2024-25-க்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார். அப்போது, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்யக் கூறி காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பெட்ரோல் மற்றும் டீசல் வரி உயர்வு சம்பந்தமான கேள்விகளுக்கு சீதாராமன் பதில் அளிக்க மறுத்துவிட்டர். பொருளாதார வளர்ச்சி மற்றும் நாட்டின் பாதுகாப்பு இரண்டும் மத்திய அரசின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களும் துல்லியமானவை. இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை அடைவதற்கான அனைத்து திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் வகுக்கப்பட்டுள்ளன. வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல், புதிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஏற்படுத்துதல் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கான செயல் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசு பெரும் அளவில் முதலீடு செய்ய இருக்கிறது என்று அவர் கூறினார். முதலீடுகளை அதிகரிப்பதற்காக பிரதமர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டு இருக்கிறது. வாராக் கடன்களை கண்டறிதல், வாரக் கடன்களை மீட்டல், பொதுத் துறை வங்கிகளின் மூலதனத்தை கைமாற்றுதல், புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற நடைமுறைகள் மூலம் வங்கித் துறைகள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close