[X] Close

உர மானியத் திட்டத்தில் புதிய மாற்றங்கள்: அறிமுகப்படுத்தியது மத்திய அரசு


  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:26 am
  • அ+ அ-

-,

ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத் தொகையை, நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தும் முறையில் புதிய தொழில் நுட்பங்களை மத்திய அரசு நேற்று அறிமுகம் செய்துள்ளது

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு, தேவை, வழங்கல் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தற்போது இருக்கும் மென்பொருளையும் மேம்படுத்தி இருக்கிறது. நேரடி மானியத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் உர மானியத்திற்கென்று ரூ.70,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கி வருகிறது. முதல் கட்டமாக இந்த திட்டம் 2017 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது உரத்திற்கான மானியம் அதனை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு, விற்பனை செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளது. இதனால் உர மானியத்தில் ஏற்படும் முறைகேடுகள் குறையும் என்று கூறப்படுகிறது. இது குறித்து உரத் துறை அமைச்சர் டி.வி. சதானந்தா கவுடா, இந்த புதிய திட்டத்தால் விவசாயிகள் நேரடியாக பயன் அடைவார்கள். உரத் துறையில் மோசடிகள் நடப்பதை இந்த புதிய தொழில்நுட்பம் தடுக்கும் என்று கூறினார். மேலும் அவர், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கோடும், அரசு அறிவிக்கும் சலுகைகள் நேரிடையாக அவர்களை சென்று சேர்வதற்காவும் இதுபோலான இன்னும் சில புதிய நடைமுறைகள் கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார். இதுவரை மானியத்தை உர விற்பனை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறோம். விரைவில் நேரடியாக விவசாயிகளுக்கே அந்த மானியம் சென்றடையும் வகையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம் என்று உரத் துறைக்கான மாநில அமைச்சர் மனுஷ்க் எல் மண்டாவியா கூறினார். இதுவரை பிஒஎஸ் மென்பொருளில் 13 வெர்சன்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. 2.24 லட்சம் சில்லறை உர விற்பனை நிலையங்களில் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close