[X] Close

நிறுவனர்களிடையே கருத்து வேறுபாடு: இண்டிகோ பங்குகள் 11 சதவீதம் சரிவு


11

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:27 am
  • அ+ அ-

-,

இண்டிகோ விமான நிறுவனத்தின் நிறுவனர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்நிறுவனப் பங்குகள் நேற்று 11 சதவீத அளவுக்குச் சரிந்தது. ஒரேநாளில் சந்தை மதிப்பு ரூ.6,423 கோடி அளவுக்கு வீழ்ச்சிஅடைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் 10.73 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ. 1,397.75 என்ற விலையில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே இந்நிறுவனப் பங்கு 17.54 சதவீதம் வரை சரிந்து ரூ.1,291-க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் 11.12 சதவீத அளவுக்குச் சரிந்து ரூ.1,392-க்கு விற்பனையானது. பிற்பகல் வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு 19.24 சதவீத அளவுக்கு சரிந்து ரூ.1,264.85 என்ற விலையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று இந்நிறுவன பங்குகள் 10 லட்சம் வரை வர்த்தகமாயின.

இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனம் இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனமாகும். இந்நிறுவனத்தை ராகேஷ் கங்வால் மற்றும் ராகுல் பாட்டியா ஆகியோர் 2006-ம் ஆண்டு தொடங்கினர்.

கங்வால் தனது நண்பரான ராகுல்பாட்டியாவின் நிர்வாக செயல்பாடுகள் விதிகளை மீறும் வகையில் உள்ளதாக செபி-யிடம் குற்றம் சாட்டினார். இந்த செய்தி வெளியான உடனேயே இந்நிறுவனப் பங்குகள் சரியத் தொடங்கின.

நிறுவன செயல்பாடுகள் குறித்து ஜூலை 19-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என நிர்வாகத்துக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்நிறுவனத்தில் கங்வாலுக்கு 37 சதவீதமும், பாட்டியாவுக்கு 38 சதவீதமும் பங்குகள் உள்ளன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close