[X] Close

ஜன் தன் யோஜனா நிதி ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது


1

  • kamadenu
  • Posted: 11 Jul, 2019 08:28 am
  • அ+ அ-

-,

மோடி அரசு தனது கடந்த ஆட்சிக் காலத்தில் ஜன் தன் யோஜனா என்ற ‘அனைவருக்கும் வங்கி’ திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் உள்ள மொத்த சேமிப்பு நிதி தற்போது ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 36.06 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூலை 3 ம் தேதி வரை மொத்தமாக அந்தக் கணக்குகளில் ரூ.1 லட்சம் கோடி அளவில் வைப்பு நிதியாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2014 ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ் உள்ள வங்கிக் கணக்குகளில் குறைந்த அளவு பணம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கிடையாது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை தொடங்குபவர்களுக்கு டெபிட் கார்ட், ஓவர் டிராஃப்ட் போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.

ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் முந்தைய ஆண்டில் இருந்ததை விட இந்த ஆண்டு குறைந்துள்ளன என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 மார்ச் மாதத்தில் 5.10 கோடி ஜீரோ பேலன்ஸ் கணக்குகள் இருந்தன. 2019 மார்ச் மாதத்தில் அது 5.07 கோடியாக குறைந்துள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் உள்ள சுமார் 28.44 கோடி வங்கி பயனாளர்களுக்கு ரூபே டெபிட் கார்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் வெற்றி அடைந்ததால், ஆகஸ்ட் 28, 2018-க்குப் பிறகு தொடங்கப்பட்ட புதிய கணக்குகளுக்கு விபத்து காப்பீட்டுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஓவர் டிராஃப்ட் வரம்பும் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மானியங்கள் நேரடியாகவே பயனாளிகளைச் சென்றடைவதில் இந்த திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில் 50 % பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close