[X] Close

ரூ.2,000 தயாரிப்பு செலவு ரூ.3.53


2-000-3-53

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:10 am
  • அ+ அ-

2000 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 65 பைசா குறைந்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய நிதியாண்டில் இருந்ததைவிட 2018-19 நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 65 பைசா குறைந்துள்ளது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2017-18 – ம்ஆண்டுகளில் ரூ.4.18 ஆக இருந்தஅதன் தயாரிப்பு செலவு 2018-19 -ம் ஆண்டுகளில் ரூ.3.53 ஆக குறைந்துள்ளது.

ரிசர்வ் வங்கி மற்றும்எஸ்பிஎம்சிஐஎல் ஆகிய இரு நிறுவனங்கள் ரூபாய் காகிதங்களை அச்சிட்டு வருகின்றன. இதில் 2000 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியால் மட்டுமே அச்சிடப்படுகின்றன.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் அளித்த தகவலின்படி, ரிசர்வ் வங்கியின் 500 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 2017-18 ஆண்டுகளில் ரூ.2.39 ஆக இருந்தது. 2018-19-ல்அது ரூ.2.13 ஆக குறைந்துள்ளது. அதேபோல், 200 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 2017-18 ல்ரூ.2.24 ஆக இருந்தது 2018-19 ல்ரூ.2.15 ஆக குறைந்துள்ளது.

எஸ்பிஎம்சிஐஎல் நிறுவனம் அச்சிடும் 500 ரூபாய் நோட்டுக்கான தயாரிப்பு செலவு 2018-19 மற்றும் 2017-18 ஆண்டுகளில் ரூ.3.37 ஆக உள்ளது. 200 ரூபாய் நோட்டின் தயாரிப்பு செலவிலும் எந்த மாற்றமும் இல்லை. 2018-19மற்றும் 2017-18 இரு நிதியாண்டுகளிலும் அதன் தயாரிப்பு செலவு ரூ.3.12 ஆகவே உள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close