[X] Close

வெளிநாடு செல்ல ஜெட் ஏர்வேஸ் முன்னாள் தலைவர் நரேஷ் கோயலுக்கு அனுமதி மறுப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு


  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:07 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸின் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்ய முடியாது என்று டெல்லி உயர் நீதி மன்றம் கூறியுள்ளது. மேலும், அவர் அளித்த மனுவின் மீதான மத்திய அரசின் பதிலையும் டெல்லி உயர் நீதிமன்றம் கோரியுள்ளது.

கடந்த மே மாதம் நரேஷ் கோயல் மற்றும் அவருடைய மனைவி அனிதா கோயல் இருவரும் துபாய் செல்ல இருந்த நிலையில் மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை எதிர்த்து நரேஷ் கோயல் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு டெல்லி உயர் நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தற்போதைய சூழ்நிலையில் நரேஷ் கோயலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி தர முடியாது. ரூ.18 ஆயிரம் கோடியை வைப்புத் தொகையாக செலுத்திவிட்டு அவர் வெளிநாடு செல்லலாம் என்று நீதிபதி சுரேஷ் கெய்த் தெரிவித்தார்.

நரேஷ் கோயல் சார்பாக மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங் வாதிட்ட போது, வெளிநாடு செல்வதற்கு தடை விதிப்பதற்கான எந்த குற்றச் சாட்டும் சுமத்தப்படாத நிலையில் நரேஷ் கோயலும் அவரது மனைவி யும் மும்பை விமான நிலையத் தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதற்கு எதிராக அவர்கள் தொடுத்த மனு விசாரணைக்கு வர இருந்த நிலையில்தான், ஜூலை 6 அன்று தீவிர மோசடிக்கான விசாரணை அலுவலகத்தில் இருந்து அவ ருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள் ளது என்று கூறினார்.

இந்த மனுவை கூடுதல் சொலி சிட்டர் ஜெனரல் மணீந்தர் ஆச் சார்யா மற்றும் மத்திய அரசின் ஆலோசகர் அஜய் திக்பால் ஆகி யோர் எதிர்த்தனர். இது ரூ.18,000 கோடி மோசடி சம்பந்தபட்ட வழக்கு. மேலும், இது குறித்து எஸ்எப்ஐஒ விசாரணை நடத்தி வருகிறது.

இது குறித்து நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் கூறுகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நடத் தப்பட்ட சோதனையில் அங்கு பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட் டது. அதைத் தொடர்ந்தே அவர்கள் மீது வெளிநாடு செல்வதற்கான தடை விதிக்கப்பட்டது என்றது.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரனையை ஆகஸ்ட் 23-க்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close