[X] Close

ஏதர் 450 பேட்டரி ஸ்கூட்டர் சென்னையில் அறிமுகம்


450

  • kamadenu
  • Posted: 10 Jul, 2019 10:09 am
  • அ+ அ-

இருசக்கர பேட்டரி வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏதர் நிறுவனம், நேற்று சென்னையில் அதன் ஏதர்450 என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை ஏதர் நிறுவனத்தின் நிறுவனர்கள் ஸ்வப்னில் ஜெயின் மற்றும் தருண் மேத்தா இருவரும் அறிமுகம் செய்தனர்.

இதன் விலை ரூ.1,31,683 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சராசரியாக 110 கி.மீ வரை பயணிக்ககூடிய அளவிற்கு இந்த ஸ்கூட்டர்வடிவமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே ஏதர் 450 மாடல்பெங்களூரில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் நேற்று அதனை அறிமுகம் செய்தனர்.

இதற்கென சென்னையில் 10 சார்ஜிங் நிலையத்தை அமைத்துள்ளனர். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு 2013 - ம்ஆண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. தற்சமயம் பெங்களூரு மற்றும் சென்னையில் தனது தயாரிப்புகளை வழங்கி வரும் இந்த நிறுவனம், அடுத்த கட்டமாக ஹைதராபாத்திலும் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close