[X] Close

பங்குச் சந்தையில் தொடர் சரிவு


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 08:02 am
  • அ+ அ-

-,

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஊக்கமளிப்பதாக அமையவில்லை. இதனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே பங்குச் சந்தை இறங்குமுகத்தை சந்தித்து வந்தது. தற்போது தொடர்ந்து இரண்டாம் நாளாக, வாரத்தின் தொடக்க நாளான திங்களன்று மும்பை பங்குச் சந்தை 793 புள்ளிகள் சரிந்தது. ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன் அன்ட் டூப்ரோ, பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

காலையில் வர்த்தகம் தொடங்கியதிலிருந்து பங்குச் சந்தை தொடர்ந்து இறக்கத்தை சந்தித்தது. ஒரு கட்டத்தில் 907 புள்ளிகள் வரை சரிந்தது. வர்த்தகம் முடிவில் 793 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 38,720 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் 252 புள்ளிகள் சரிந்ததில் குறியீட்டெண் 11,558 புள்ளிகளானது.

ஓஎன்ஜிசி, என்டிபிசி, ஹீரோ மோட்டோகார்ப், மாருதி ஆகிய நிறுவன பங்குகள் 8 சதவீத அளவுக்கு சரிந்தன. அதேசமயம் யெஸ் வங்கி, ஹெச்சிஎல், டிசிஎஸ் நிறுவன பங்குகள் 5 சதவீத அளவுக்கு உயர்ந்தன.

சூப்பர் ரிச் பிரிவில் வரும் கோடீஸ்வரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதால், அதிக முதலீடு செய்யும் தனி நபர்கள் முதலீடு குறைந்தது. மேலும் சர்வதேச சூழல் காரணமாக அந்நிய நிறுவன முதலீடுகளும் குறைந்தன.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதால் ஆசிய சந்தையிலும் சரிவு காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பும் 30 காசு வரை சரிந்து ஒரு டாலர் ரூ.68.72 என்ற விலையில் வர்த்தகமானது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close