[X] Close

தங்கம் கையிருப்பில் இந்தியா புதிய உச்சம்


  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 08:04 am
  • அ+ அ-

-,

இந்தியாவின் தங்கம் கையிருப்பு இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. தற்போது நாட்டின் தங்கம் கையிருப்பு 618 டன்னாக உள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜூலை 2019 நிலவரத்தில் இந்தியா வின் தங்கம் கையிருப்பு 618 டன்னாக உள்ளது. மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் தங்கம் கையிருப்பு பங்கு 6.1 சதவீதமாக உள்ளது. தங்கம் கையிருப்பு உயர்ந்ததன் மூலம் இந்தியா, தங்கம் கையிருப்பில் முன்னணி 10 நாடுகள் பட்டியலில் இணைந் துள்ளது. கடந்த ஏப்ரல் மாத நிலவரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 606 டன் என்ற அளவில் பட்டியலில் 11-வது இடத்தில் இருந்தது. தற்போது நெதர்லாந்தைப் பின்னுக்குத் தள்ளி 10-ம் இடத்தைப் பிடித்துள்ளது.

முன்னணி பத்து இடங்களில் உள்ள நாடுகளில் அமெரிக்கா முத லிடத்தில் உள்ளது. அதன் மொத்த தங்கம் கையிருப்பு 8,133.4 டன் னாக உள்ளது. அதன் மொத்த அந் நிய செலாவணி இருப்பில் தங்கம் கையிருப்பு மட்டுமே 74.5 சதவீத மாக உள்ளது. இரண்டாம் இடத்தில் ஜெர்மனி உள்ளது. இதன் கை யிருப்பு 3,367.9 டன்னாகும். மூன் றாம் இடத்தில் சர்வதேச செலா வணி நிதியம் வகிக்கிறது. இதன் கையிருப்பு 2,814.0 டன்னாக உள் ளது. இத்தாலி(2,451 டன்), பிரான்ஸ் (2,436 டன்), ரஷ்யா (2,190 டன்) ஆகிய மூன்றும் நான்கு, ஐந்து மற் றும் ஆறாம் இடங்களில் உள்ளன. ஏழாம் இடத்தில் உள்ள சீனாவிடம் 1,916.3 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது. எட்டாம் இடத்தில் சுவிசர்லாந்தும் (1,040 டன்), ஒன்பதாம் இடத்தில் ஜப்பானும் (765.2) உள்ளன.

அரசிடம் கையிருப்பில் உள்ள தங்கம் நாட்டின் பொருளாதாரத் துக்கு உதவியாக இருக்கும். ஆனால், பயன்பாட்டில் உள்ள தங்கம் அதிகமானால் முதலீடுகள் முடங்கிப் போகும் வாய்ப்புள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close