[X] Close

பாகிஸ்தான் பொருட்களுக்கு 200% சுங்க வரி


200

  • kamadenu
  • Posted: 09 Jul, 2019 07:52 am
  • அ+ அ-

-,

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவீத சுங்கவரி விதிக்க வகை செய்யும் தீர்மானம் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீத சுங்க வரி விதிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான தீர்மானத்தை மத்திய நிதித் துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் மக்களவையில் நேற்று கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close