[X] Close

2019-20 நிதியாண்டில் வரி தாக்கல் பட்டியலில் புதிதாக 1.3 கோடி பேர்: வருமான வரி துறைக்கு மத்திய ஆணையம் இலக்கு


2019-20-1-3

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:25 am
  • அ+ அ-

வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் பட்டியலில் இந்த நிதி ஆண்டில் புதிதாக 1.3 கோடி பேரை இணைக்க மத்திய மறைமுக வரிகள் ஆணையம் வருமான வரித் துறைக்கு இலக்கு வைத்துள்ளது.

வரி செலுத்துவோர் எண்ணிக் கையை அதிகரிக்கும் முயற்சிகளை அரசுத் தீவிரமாக எடுத்துவருகிறது. இதையொட்டி வருமான வரித் துறை வரிக் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செயல்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது மத்திய வரி ஆணையம்.

2019-20 நிதி ஆண்டுக்கான இந்த செயல்திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன்படி இந்த நிதி ஆண்டில் 1.3 கோடி பேரை வரிக் கணக்கு தாக்கல் செய்வோர் பட்டியிலில் புதிதாக சேர்க்க இலக்கு வைத்துள்ளது.

முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைப்படுத்தப்படாத ஆகிய இரண்டு துறைகளிலும் தொழில் வளர்ச்சி கணிசமாக இருப்பதால் 1.3 கோடி புதிய வரிக் கணக்கு தாக்கல் செய்வோரை இணைக்கும் இலக்கு எட்டப்படக்கூடியதே என வருமான வரித் துறை குறிப்பிட் டுள்ளது

வரி செலுத்த விழிப்புணர்வு

வருமான வரித் துறையின் கீழ் 18 மண்டலங்கள் உள்ளன. அந்தந்த மண்டல அதிகாரிகள் மூலமாக புள்ளிவிவரங்களைச் சேகரித்து, அந்தப் புள்ளிவிவர்ங்களை திறம் பட பயன்படுத்தி பல்வேறு விசா ரணைகள் மூலம் வரிச் செலுத்து வோர் பட்டியலில் சேர்க்க தயாராக இருக்கிறது. வரித் துறை ஆணை யம், புள்ளி விவரங்களைச் சரி யாகப் பயன்படுத்தினாலே பெரும் பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுபிடிக்க முடியும் என மத்திய நேரடி வரிகள் ஆணை யம் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. மேலும் வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கு விழிப்புணர்வு செய்யவும் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

2018-19 நிதி ஆண்டில் மட்டும் 1.10 கோடி புதிய வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் பட்டிலில் இணைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close