[X] Close

கோடீஸ்வரர்களுக்கான வரி விதிப்பு இந்தியாவை விட பிற நாடுகளில்தான் அதிகம்: வரி உயர்வு மீதான மறு ஆய்வு கோரிக்கைக்கு அரசு விளக்கம்


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:21 am
  • அ+ அ-

மத்திய பட்ஜெட்டில், ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் இருப்பவர்களுக்கு வரி விகிதம் உயர்த்தப்பட்டது. அந்த வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்ட நிலையில், பிற நாடுகளில் இதைவிட மிக அதிகமாக வரி வசூலிக்கப்படுகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்த வரி விகிதம் குறைவானது. எனவே, வரி விதிப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் ஆண்டு வரு மானம் ரூ.2 கோடிக்கு மேல் இருப் பவர்களுக்கான வரி விகிதம் உயர்த் தப்பட்டது. 2 முதல் 5 கோடி வரை ஆண்டு வருமானம் உடையவர் களுக்கு 39 சதவீத வரியும், ரூ.5 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உடையவர்களுக்கு 42.7 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

மறு ஆய்வு

இந்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு நிகரான வரிவிதிப்பை இந்தியா கொண்டுள் ளது. ஆனால் அந்நாடுகள் தங்கள் மக்களுக்கு தரமான கல்வி, சிறந்த மருத்துவ வசதி, சமூக பாதுகாப்பு போன்றவற்றை வழங்குகிறது. இவை எதையும் செய்து தராமல் வரியை மட்டும் உயர்த்துவது எந்த விதத்தில் சரி என்று அதிக வரி விதிப்பு குறித்து விமர்சனம் வைக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த வரி விதிப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், ரூ.20 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டு வரு மானம் பெறுபவர்களுக்கும் கோடி யில் ஆண்டு வருமானம் பெறுபவர் களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இருவருக்கும் ஒரே அளவிலான வரியை விதிக்க முடியாது. அது ஏற்றத்தாழ்வை உருவாக்கும்.

அரசு விளக்கம்

அதிக வருமானம் பெறுபவர் கள் அதிக வரி செலுத்துவது நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமை. பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தியா வின் வரி விகிதம் குறைவாகவே உள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close