[X] Close

அரசுக்கு கூடுதலாக ரூ.30,000 கோடி கிடைக்கும்: வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே தகவல்


30-000

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:22 am
  • அ+ அ-

மத்திய அரசு பட்ஜெட்டில் வரிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுத்திருப்பதன் மூலம் 2019-20 நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என வருவாய் துறை செயலர் அஜய் பூஷ்ண் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 5-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அதேபோல் தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க உலோகங்கள், கற்கள் போன்றவற்றுக்கும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கும் வரிகள் உயர்த்தப்பட்டன. இத்தகைய வரிகள் உயர்த்தப்பட்டதால் அரசுக்கு இந்த நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி வருவாயாகக் கிடைக்கும் என அவர் கூறினார்.

ஆண்டு தனிநபர் வருமானம் ரூ.2 கோடி முதல் 5 கோடிவரை இருப்பவர்களுக்கும், ரூ. 5 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கும் கணிசமாக வரியை உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதிக வருமானம் ஈட்டுபவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு அதிகப் பங்களிப்பைச் செலுத்த வேண்டியது அவசியம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் மீதான செஸ்வரியையும் கூட்டியுள்ளது. ஆனால், அதேசமயம் நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியைக் குறைத்துள்ளது.

ஆண்டு விற்பனை ரூ.400 கோடி வரை இருப்பவர்களுக்கு வரி 25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு முன்னர் ரூ.250 கோடியாக இருந்தது. இதனால் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சற்று குறையும். கோடீஸ்வரர்களுக்கு உயர்த்தப்பட்ட வரியின் மூலம் ரூ.12,000 கோடி முதல் ரூ.13,000 கோடி வரையிலும், தங்கத்தின் மீது உயர்த்தப்பட்ட வரியின் மூலம் ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையிலும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close