[X] Close

பூஷண் பவர் நிறுவனம் ரூ.3,800 கோடி மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி தகவல்


3-800

  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 08:24 am
  • அ+ அ-

பூஷண் பவர் & ஸ்டீல் நிறுவனம் ரூ.3,800 கோடி அளவில் நிதி மோசடி செய்திருப்பதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துஉள்ளது.

பூஷண் பவர் & ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிடமிருந்து ரூ.3,200 கோடி கடன் பெற்றுள்ளது. மட்டுமல்லாமல் துபாய் மற்றும் ஹாங்காங்கில் உள்ள அதன் கிளைகளுக்கும் ரூ.613 கோடி அளவில் கடன் பெற்றுள்ளது. இதனை முறையாக செலுத்தாத நிலையில் இந்த நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அதிக அளவில் கடன் பெற்று செலுத்த முடியாத நிலையில் ஏற்கனவே பூஷண் பவர் & ஸ்டீல் நிறுவனத்தின் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திவால் அறிவுப்புக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இந்த நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் கையகப்படுத்தியது. இன்னும் இந்நிறுவனத்தின் மீதான வழக்குகள் திவால் நடவடிக்கை நீதிமன்றத்தில்தான் உள்ளன.

இந்நிறுவனத்தின் மோசடிகள் குறித்து கடந்த வாரம் தீவிர மோசடிக்கான விசாரணை அலுவலகம் டெல்லி நீதிமன்றத்தில் 70 ஆயிரம் பக்க அளவில் அறிக்கை தாக்கல் செய்தது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close