[X] Close

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த நீரவ் மோடிக்கு தீர்ப்பாயம் உத்தரவு


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 09:00 am
  • அ+ அ-

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.7,200 கோடி தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் (டிஆர்டி) உத்தரவிட்டுள்ளது.

தற்போது லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது சகாக்கள் இந்த கடன் தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.7,200 கோடி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார் வைர வியாபாரியான நீரவ் மோடி. இவர் மீது அந்நியச் செலாவணி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நீரவ் மோடியை, லண்டன் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அமலாக்கத் துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில் கடன் மீட்பு தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பாயத்தின் கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரி தீபக் தாக்குர் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சாதகமாக உத்தரவை பிறப்பித்தார்.

அந்த உத்தரவில் குற்றம் சாட்டப்பட்ட நீரவ் மோடி மற்றும் அவரது சகாக்கள் வங்கியில் பெற்ற கடன் தொகையோடு 14.30 சதவீத வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் 16.20 சதவீத வட்டியுடன் அசலையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடன் வசூல் தீர்ப்பாய அதிகாரிகள் இத்தீர்ப்பின் அடிப்படையில் கடன் வசூலிக்கும் நடவடிக்கையில் இறங்குவார்கள் என்று டிஆர்டி தெரிவித்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close