[X] Close

அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான பட்ஜெட்: நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து


5

  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:59 am
  • அ+ அ-

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் மோடி அரசின் இரண்டாம் ஆட்சி காலத்துக்கான செயல் வரைவு பட்ஜெட் என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கையில் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜிவ் குமார் கூறியதாவது, “முதல் முழு நேரப் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் இதுவரை இல்லாத வகையில் அமைந்துள்ளது. இந்த பட்ஜெட் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியின் ஐந்து ஆண்டுகளுக்கான செயல் வரைவு போல் உள்ளது.

அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தேவையான செயல் திட்டங்களை பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. எதிர்க்கட்சிகள் நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டில் எந்தப் பலனும் இல்லை என விமர்சிக்கின்றன. ஆறு மாதங்களுக்கு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே நடுத்தர மக்களுக்கான ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டது. மீண்டும் இப்போது என்ன சலுகையை அளிக்க முடியும். பட்ஜெட் என்பதற்காகவே சலுகைகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பதில்லை. இந்த பட்ஜெட் முற்றிலும் மாறுபட்ட பட்ஜெட். இதில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முடிவுகள் பரந்துபட்ட பார்வையில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவை “5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பட்ஜெட்” என்று அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close