[X] Close

ஏற்றுமதி துறைக்கு ஏமாற்றமளித்த பட்ஜெட்


  • kamadenu
  • Posted: 07 Jul, 2019 08:58 am
  • அ+ அ-

பட்ஜெட்டில் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இருந்த வாய்ப்பை அரசு தவறவிட்டிருக்கிறது என ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு விமர்சனம் செய்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பாக செயல்படும் இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் நடப்பாண்டின் மத்திய பட்ஜெட்டில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் எதிலும் கவனம் செலுத்தப்படவில்லை எனக் கூறியுள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் மோஹித் சிங்லா கூறுகையில், மே மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி 3.93 சதவீதமாகவும், ஏப்ரல் மாதத்தில் 0.64 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் பல்வேறு சர்வதேச நெருக்கடிகளாலும், வர்த்தகப் போர் காரணங்களாலும் ஏற்றுமதியாளர்களுக்குப் பாதிப்பு உள்ளது. ஏற்றுமதி துறையில் பணப்புழக்கம் பிரச்சினையாக உள்ளது. ஆனால், இவை எதுவும் பட்ஜெட்டில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஏற்றுமதி துறையின் வளர்ச்சி தேக்கமடைந்து எதிர்மறை போக்கில் உள்ள நிலையில், பட்ஜெட்டில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், சலுகைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஏற்றுமதியை ஊக்குவிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இந்த பட்ஜெட்டில் தவறவிடப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார். அதேசமயம் வேளாண் துறை சார்ந்த தொழில்முனைவோர்களுக்கு அரசு பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவித்திருப்பதன் மூலம் ஓரளவுக்கு ஏற்றுமதி துறைக்குப் பலனளிக்கும் எனக் கூறியுள்ளார். பட்ஜெட் குறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தலைவர் சரத் குமார் சரஃப் கூறியதாவது, “பட்ஜெட்டில் உற்பத்தி துறை மற்றும் ஏற்றுமதி துறை சந்திக்கும் அடிப்படை சவால்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக் கின்றன. குறிப்பாக, கடன் வசதி, உட்கட்டமைப்பு, தொழிலாளர் சட்டம், திறன் உள்ளிட்டவற்றில் இத்துறைகள் நிறைவாக இல்லை. இவற்றுக்காக அரசு திட்டங்களைச் செயல்படுத்துவது வரவேற்கத்தக்கது” என்றார். மேலும், நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிக் குறைப்பு நடவடிக்கையை ஆண்டு விற்பனை உள்ளிட்ட நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் எல்லா நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என எஃப்ஐஇஓ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close