[X] Close

சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.57; டீசல் விலை ரூ.2.52 உயர்வு


2-57-2-52

  • kamadenu
  • Posted: 06 Jul, 2019 10:09 am
  • அ+ அ-

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் விலை இன்று உயர்ந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று  மத்திய பட்ஜெட்'டை தாக்கல் செய்தார்.  அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பெட்ரோல், டீசலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு முதல் நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கான விலை உயரும் என அறிவிக்கப்பட்டது.

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 2.57 ரூபாய் உயர்ந்து ரூ.75.76 ஆகவும், டீசல், நேற்றைய விலையிலிருந்து 2.52 ரூபாய் அதிகரித்து ரூ.70.48 காசுகளாகவும் விற்பனையாகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close