[X] Close

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சலுகைகள்: பட்ஜெட்டில் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 17:31 pm
  • அ+ அ-

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், அவற்றில் முதலீடு செய்பவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், அவற்றில் முதலீடு செய்பவர்களும் தாக்கல் செய்யும், பங்கு ப்ரீமியங்களின் மதிப்பீட்டுக்கு எந்த வகையிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஏஞ்சல் டேக்ஸ் எனப்படும், பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிலுவையில் உள்ள மதிப்பீடுகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (CBDT) மூலம் சிறப்பு நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, குடியிருப்பு வீடுகளை விற்று திரட்டப்படும் முதலீட்டுக்கு, மூலதன ஆதாயத்தில் இருந்து விலக்கு அளிக்கும் வரம்பு 31.3.2021 வரை  நீட்டிக்கப்படுகிறது. இந்த விலக்கு வழங்குவதற்கு அளிக்கப்படும் நிபந்தனைகள் தளர்த்தப்படும்

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கென பிரத்யேகமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தூர்தர்ஷன் மூலம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சிக்கான வாய்ப்புள்ள புதிய நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பெரிய உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு, வெளிப்படையான போட்டி ஏலத்தின் மூலமாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இதன்மூலம் முதலீட்டுடன் இணைந்த வருமான வரி விலக்குகள், வருமான வரி சட்டத்தின் 35 AD பிரிவுகள் மூலம் அளிக்கப்படும். மற்ற மறைமுக வரிச் சலுகைகளும் அளிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close