[X] Close

பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்வு; தங்கம் விலை உயர்கிறது: பட்ஜெட்டில் அறிவிப்பு


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 14:45 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி(செஸ்) லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோல தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் 10 சதவீதமாக இருந்த சுங்கவரி, 12.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக பதவி ஏற்றுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கூடுதல் வரி உயர்வால் இனி விலை உயரும் என எதிர்பார்க்கலாம்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரி 10 சதவீதம் விதிக்கப்பட்டு வந்தது. இந்த பட்ஜெட்டில் சுங்கவரி 2.6 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

gold.jpg 

இதனால் இனி வரும் காலங்களில் தங்க நகைகளின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். சமீபத்தில் தங்க நகை உற்பத்தியாளர்கள், இறக்குமதி தங்கத்துக்கு வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் இப்போது வரிஉயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2018-19-ம் ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து, 3280 கோடி அமெரிக்க டாலராக சரிந்தது. இந்த வரி உயர்வால் இனிவரும் காலங்களில் தங்கத்தின் இறக்குமதி இன்னும் குறையக்கூடும். இந்த வரி உயர்வுமூலம் நடப்பு கணக்குப் பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

வாகனங்களின் உதரிபாகங்கள், ஆப்டிகல் பைபர்ஸ், டிஜிட்டல் கேமிராக்கள், முந்திரி பருப்பு, குறிப்பிட்ட வகை சிந்தடிக் ரப்பர் ஆகியவற்றின் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாகனங்களின் குறிப்பிட்ட சில பாகங்களுக்கு வரி நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close