[X] Close

மத்திய பட்ஜெட் 2019: காத்திருக்கும் சவால்கள்


2019

  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 10:09 am
  • அ+ அ-

-இணையதள செய்திப்பிரிவு

நடப்பு நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்றவுடன் முழுமையான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் அதன் தொடர்ச்சியாகவே இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இது.

பொருளாதார வளர்ச்சி சரிவு, உற்பத்தி குறைவு, வேலையில்லா திண்டாட்டம் என பல பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வரும் நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள முதல் மத்திய பட்ஜெட் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது.

இந்திரா காந்திக்கு பிறகு முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார். அவர் பதவியேற்றுள்ள இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் அடுத்தடுத்து சவால்களை சந்திக்கும் காலமாக உள்ளது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close