[X] Close

எஸ்ஸார் ஸ்டீல் வழக்கு; ஆர்சிலர் மிட்டல் வாங்குவதற்கு என்சிஎல்டி ஒப்புதல் அளித்தது


  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:02 am
  • அ+ அ-

ரூயா சகோதரர்களுக்கு சொந்தமான எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கு ஆர்சிலர்மிட்டல் அளித்த ஏலத் தொகைக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (என்சிஎல்டி) ஒப்புதல் அளித்துள்ளது.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த வழக்குதற்போது முடிவுக்கு வந்துள்ளது. அத்துடன் ரூயா சகோதரர்கள் மீண்டும் இந்த ஆலையை வாங்குவதற்கு அளித்த விண்ணப்பத்தையும் என்சிஎல்டி நிராகரித்துள்ளது.

நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக ஆர்சிலர் மிட்டல் நிறுவனம் அளித்திருந்த நிபந்தனைகளில் சில மாற்றங்களையும் என்சிஎல்டி செய்துள்ளது. என்சிஎல்டி-யின் இந்த உத்தரவு எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு மிகப்பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நிறுவன செயல்பாட்டுக்கு கடன் அளித்த நிறுவனங்களில்ரூ. 1 கோடிக்கு மேல் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு 60 சதவீத தொகை திரும்ப கிடைக்கும். நிறுவன ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை ரூ. 1 கோடி இருப்பின் அது முழுமையாக கிடைக்கும். ஆனால் கடன் அளித்த வங்கிகளுக்கு தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீதம்தான் கிடைக்கும். இதனால் வங்கிகள் தீர்ப்பின் முழு விவரத்துக்காக காத்திருக்கின்றன.

எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் மீதான திவால் நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்நிறுவனத்துக்கு மொத்தம் ரூ. 54 ஆயிரம்கோடி கடன் நிலுவை உள்ளது. இதனால் இந்நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு அதற்குரிய நடைமுறைகளை வங்கிகள் மேற்கொண்டன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close