[X] Close

7 சதவீத வளர்ச்சி சாத்தியம்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்


7

  • kamadenu
  • Posted: 05 Jul, 2019 08:01 am
  • அ+ அ-

தலைமை பொருளாதார ஆலோச கர் கே. சுப்ரமணியன் தலைமையில் உருவாக்கப்பட்ட 2018-19 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய் வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய தினம், முடிந்த நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடா ளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவது வழக்கம். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று அறிவிக்கப்பட இருக்கிற நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் கே. சுப்ர மணியன் தலைமையில் தயா ரிக்கப்பட்ட பொருளாதார ஆய்வ றிக்கை நேற்றைய தினம் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 7 சதவீதத்தை அடைய சாத்தியமிருப்பதாக அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது முடிந்த நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகள், நாட்டு வளர்ச்சியில் என்னென்ன மாற்றங்களை உரு வாக்கி இருக்கிறது. புதிய நிதி ஆண்டில் நாடு எதிர்கொள்ளவிருக் கும் சவால்கள், வழிகாட்டுதல்கள் போன்றவற்றை உள்ளடக்கியது ஆகும்.

இந்தியா பயணிக்க வேண்டிய பாதை

2024- ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை அடைய வேண்டும் என்றால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 8 சதவீதமாக இருக்க வேண்டும். நடத்தைசார் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் நிலையான வளர்ச்சியை அடைய முடியும் என்று நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளா தார அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தனியார் முதலீடு, வேலை வாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி, தொழிலாளர் விதிகள் சீர்திருத்தம், சேமிப்பு, ஏற்றுமதி, உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நாடு மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்களை இந்த ஆய்வறிக்கை கோடிட்டு காட்டுகிறது.

இந்த ஆய்வறிக்கை குறித்து தலைமை பொருளாதார ஆலோச கர் கே. சுப்ரமணியன் கூறியதாவது: வழக்கமான சிந்தனைகளிலிருந்து மாறுபட்டு புதிய சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கையை உருவாக்கி இருக்கிறோம். நீல வானம் என்பது அகன்ற நோக்கத்தின் அடையாளம். அதனை குறிப்பதற் காகத்தான் இதன் அட்டைப்படம் நீல வான நிறத்தில் வடிவமைக்கப் பட்டு இருக்கிறது.

இந்தியா பல்வேறு கலாச்சார பண்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட நாடு. அதற்கேற்ப நம்முடைய பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். நடத்தை சார் பொருளாதாரக் கொள்கையே இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். இவையனைத் தையும் உள்ளடக்கியதாக இந்த ஆய்வறிக்கை உருவாக்கப் பட்டு இருப்பதாக அவர் கூறினார்.

மேலும் அவர், தனியார் முதலீடு களை அதிகரிக்கச் செய்வதன் மூலமே இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும். முதலீடு கள் பெருகும்போது புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிவரும். மட்டு மல்லாமல், நாட்டின் ஏற்றுமதி உயரும். தற்போது சீனா ஏற்றுமதி களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் மூலமே சீனா உலகளாவிய சந்தையில் தன்னை தக்க வைத்துக் கொள்கிறது. ஏற்றுமதிகளை அதிகரிப்பதை நாம் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறினார். அதேபோல் தொழிலாளர் சீர்திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே தனியார் முதலீட்டை ஈர்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தொழிலாளர் விதிகளை மிகக் கடுமையாக கடைபிடித்த மாநிலங்களால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடிய வில்லை. வேலை வாய்ப்பு களை உருவாக்குவதற்கு தற்போது இருக்கும் தொழிலாளர் விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த ஆய்வறிக்கை யில், இந்தியா மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்கும் வழி முறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இரண்டு பாகங்களாக இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. முதல் பாகம், சமீபத்திய பொருளாதார முன்னேற்றங்களை பகுப்பாய்வு செய்கிறது. இரண்டாவது பாகம், முக்கிய பொருளாதார துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களை புள்ளி விவரங்கள் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close