[X] Close

சென்னையில் மைக்ரோசிப் மையம் தொடக்கம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 09:05 am
  • அ+ அ-

மைக்ரோசிப் டெக்னாலஜி இன்கார்ப்பரேஷன் நிறுவனம் சென்னையில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1,200 பணியாளர்கள் பணிபுரியும் வகையில் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசிப் மையம் சென்னையில் 2012-ம் ஆண்டிலிருந்தே செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே பெங்களூர் மற்றும் ஹைதராபாதில் இந்நிறுவனத்துக்கு மேம்பாட்டு மையங்கள் உள்ளன. இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் நோக்கில் சென்னையில் புதிய மையத்தை இந்நிறுவனம் அமைத்துள்ளது. இங்கு ஐசி டிசைன், புதிய வடிவமைப்பு, கம்ப்யூட்டர் சார்ந்த வடிவமைப்பு (கேட்), சாஃப்ட்வேர் மேம்பாடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படும் என்று நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கணேஷ் மூர்த்தி கூறினார் . கடந்த 7 ஆண்டுகளில் இந்நிறுவனத்தின் பணியாளர் எண்ணிக்கை 6 மடங்கு அதிகரித்து தற்போது 1,800 பணியாளர்களுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது. மைக்ரோசிப் நிறுவனத்துக்கு இந்தியாவில் வாடிக்கையாளர் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் செமி கண்டக்டர் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிப்பதற்காக முதலீடுகளையும் அதிகரித்து வருகிறது மைக்ரோசிப் நிறுவனம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close