[X] Close

கிரைஸ்லர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ லீ இயாகோக்கா காலமானார்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 09:02 am
  • அ+ அ-

கிரைஸ்லர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லீ இயாகோக்கா நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானர். அவருக்கு வயது 94.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனம் கிரைஸ்லர். இந்நிறுவனத்தில் 1978-ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக லீ இயாகோக்கா நியமிக்கப்பட்டார். 1992-ம் ஆண்டு ஓய்வு பெறும்வரை அந்நிறுவனத்தின் தலைவராகவும், தலைமை அதிகாரியாகவும் அவர் செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில் கிரைஸ்லர் நிறுவனத்தில் பல மாற்றங்களை நிகழ்த்தி லாபப் பாதையில் அழைத்துச் சென்றார்.

கிரைஸ்லரில் இணைவதற்கு முன்பு போர்டு நிறுவனத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்தார். 1924-ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்த லீ இயாகோக்கா கல்லூரி படிப்புக்கு பிறகு 1946 ஆம் ஆண்டு போர்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதன் பிறகு 1960-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இவர் தலைமையில் உருவான மஸ்டாங் மற்றும் பின்டோ ஆகிய தயாரிப்புகள் இவருக்கு பெரும் புகழைத் தேடி தந்தன. அமெரிக்காவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்கள் இரண்டிலும் முக்கிய பொறுப்பில் இருந்த ஒரே ஒரு நபர் லீ இயாகோக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close