[X] Close

4 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்


4

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 09:04 am
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, யுகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட 4  வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அபராதம் விதித்துள்ளது.

உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் (கேஒய்சி) படிவம் மற்றும் அன்னியச் செலாவணி மோசடி  விதிகள்,  வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் ஆகியன தொடங்குவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதற்காக பஞ்சாப் நேஷனல் வங்கி, அலாகாபாத் வங்கி மற்றும் யுகோ வங்கிகளுக்கு தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேஷன் வங்கிக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ஆர்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வர்த்தகர்கள் அதிகம் பயன்படுத்தும் கரன்ட் அக்கவுன்ட் கணக்கில் அதிக அளவில் முறைகேடுகள் இருந்ததையும் ஆர்பிஐ சுட்டிக் காட்டி அபராதம் விதித்துள்ளது. ஆர்பிஐக்கு வந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ வகுத்துள்ள வழிகாட்டுதலை பின்பற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக செபி-க்கு அனுப்பிய கடிதத்தில் அலகாபாத் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close