[X] Close

ஐஓபி நிர்வாக இயக்குநராக கர்ணம் சேகர் நியமனம்


  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 07:31 am
  • அ+ அ-

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கர்ணம் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதலே இவர் வங்கியின் முழு நேர இயக்குநராக சிறப்பு அலுவல் அதிகாரியாக (ஓஎஸ்டி) நியமிக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி முதல் தேனா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு எஸ்பிஐ கடன் வழங்கும் உயர் குழுவின் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்தார்.

1983-ம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக பாரத ஸ்டேட் வங்கியில் தனது வங்கிப் பணியை தொடங்கியவர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close