[X] Close

விதிமுறைகளை அமல்படுத்தியதில் தவறு: ‘செபி’-க்கு தீர்ப்பாயம் ரூ.50,000 அபராதம்


50-000

  • kamadenu
  • Posted: 02 Jul, 2019 07:29 am
  • அ+ அ-

பங்கு பரிவர்த்தனை ஒழுங்கு முறை ஆணையம் (செபி) விதிமுறைகளை அமல்படுத்தியதில் தவறு இருந்ததால் அதன் மீது பங்கு பரிவர்த்தனை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் (எஸ்ஏடி) அபராதம் விதித்துள்ளது.

பிடிஐஎல் பிலிம்ஸ் அண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி மீது விதிமுறைகளை தவறாக பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிஜிஐஎல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி பூஜா மஹ்னா தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018, அக்டோபர் 26-ம் தேதி உள் வர்த்தக பேரம் குறித்த விவரங்களை அளிப்பதில் சில விதிமீறல் இருந்ததாக மஹ்னாவுக்கு ரூ.50 ஆயிரம் அபராதத்தை செபி விதித்தது. ஆனால் பிப்ரவரி 19, 2010-ம் ஆண்டிலேயே மஹ்னா அந்நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார்.

2010-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால் அக்டோபர் 26, 2018 தேதியிட்ட கடிதத்தில் அவருக்கு அபராதம் விதிப்பதாக செபி அறிவித்துள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்ற அடிப்படை விதியைக் கூட செபி பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 28-ம் தேதி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுக்காலம் மிகுந்த மன உளைச்சலுக்கு மஹ்னா தள்ளப்பட்டுள்ளார்.

அந்த வகையில் அவருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவாகியிருக்கும் என தீர்ப்பாயம் கருதுவதாகவும், இந்த அபராதத் தொகையை மனுதாரருக்கு செபி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close