[X] Close

‘நிப்ட்’, ‘ஆர்டிஜிஎஸ்’ ஆன்லைன் வங்கி பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து: இன்று முதல் அமல்


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 12:14 pm
  • அ+ அ-

NEFT மற்றும் RTGS ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு வசூலிக்கும் கட்டணங்களை ரத்து செய்து ரிசர்வ் வங்கி பிறப்பித்து உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு கடந்தமாதம் கூடி பல்வேறு முடிவுகளை எடுத்தது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் ரெப்போ 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரெப்போ 6.00 சதவீதத்தில் இருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனைகள் செய்வதற்கு தற்போது வங்கிகள் வசூலித்து வரும் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.

இதன் பயன் வாடிக்கையாளர்களை சென்றடையும் வண்ணம் வர்த்தக வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.

ரிசர்வ் வங்கி அறிவித்தபடி NEFT மற்றும் RTGS பண பரிவர்த்தனை கட்டணங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் நடைபெறும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் இல்லை.

நாட்டின் முன்னணி வர்த்தக வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, வங்கி பண பரிவர்த்தனைகளுக்கள் நிப்ட் கட்டணமாக ரூ. 1 முதல் ரூ. 5 வரை வசூலித்து வந்தது. அதுபோலவே ஆர்டிஜிஎஸ் கட்டணமாக ரூ. 5 முதல் ரூ. 50 வரை வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close