[X] Close

ஸ்விஸ் வங்கிகளில் பணம் இருப்பு: இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம், 74-வது இடத்தில் இந்தியா


74

  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 07:50 am
  • அ+ அ-

ஸ்விஸ் வங்கிகளில் பணம் இருப்பு வைப்பதில் 2018-ம் ஆண்டிலும் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத் தில் உள்ளது. முந்தைய வருடம் 73-வது இடத்தில் இருந்த இந் தியா 74-வது இடத்துக்குத் தள்ளப் பட்டுள்ளது.

ஸ்விஸ் நேஷனல் பேங்க் வெளி யிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் ஸ்விஸ் வங்கிகளில் வைக்கப் பட்டுள்ள இருப்பு குறித்த விவரங் கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத் தில் உள்ளது. இந்தியா இரண்டு ஆண்டுகளுக்கு முன் 88-வது இடத்தில் இருந்தது கடந்த ஆண்டு 15 இடங்கள் முன்னேறி 73-வது இடத்தை அடைந்தது. தற்போது ஒரு இடம் பின்னேறி 74-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மொத்த ஸ்விஸ் வங்கிகளின் இருப்பில் இந்தியாவின் பங்களிப்பு 0.07 சதவீதம் மட்டுமே. 2018-ம் ஆண் டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர் களின் இருப்பு 6 சதவீதம் குறைந்து 955 மில்லியன் ஸ்விஸ் ஃப்ராங்க் அளவுக்குக் குறைந்துள்ளது.

முதலிடத்தில் உள்ள இங்கி லாந்து மொத்த ஸ்விஸ் வங்கி களின் இருப்பில் 26 சதவீதத்தை வைத்துள்ளது. இங்கிலாந்துக்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், பிரான்ஸ், ஹாங்காங் ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஐந்து நாடுகள் மட்டுமே ஸ்விஸ் வங்கியில் 50 சதவீத இருப்புக்குப் பங்கு வகிக்கின்றன. அதிலும் முதல் பத்து இடங்களில் உள்ள 10 கணக்குகள் மூன்றில் இரண்டு பங்கு இருப்பை வைத்துள்ளன.

அடுத்த ஐந்து இடங்களில் பஹமாஸ், ஜெர்மனி, லக்சம்பர்க், கேமன் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை உள்ளன. முதல் 10 இடங் களில் உள்ள நாடுகள் ஸ்விஸ் வங்கியில் 75 சதவீத இருப்பை வைத்துள்ளன.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் ரஷ்யா 20-வது இடத் தைப் பிடித்து முன்னிலையிலும், இந்தியா 74-வது இடத்தைப் பிடித்து கடைசியாகவும் உள்ளன. சீனா 22-வது இடத்தையும், தென் ஆப்பிரிக்கா 60-வது இடத்தையும் மற்றும் பிரேசில் 65-வது இடத் தையும் பிடித்துள்ளன.

இந்தியாவுக்கு முந்தைய இடங் களில் உள்ள நாடுகளில் மொரிஷி யஸ், பிலிப்பைன்ஸ், வெனிசுலா, தாய்லாந்து, கனடா, துருக்கி, இஸ் ரேல், சவுதி அரேபியா, பனாமா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவையும் உள்ளன.

அதேசமயம் இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ் தான்(82), நேபாள்(109), பங்களா தேஷ்(89), இலங்கை (141), மியான் மர் (187), பூடான் (193) ஆகியவை பின் தங்கியுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக பாகிஸ்தான் இருப்பு நிலை இந்தியாவுக்குக் கீழ் இறங்கியுள்ளது.

ஸ்விஸ் வங்கிகளில் இருப்பு வைத்திருக்கும் இந்தியர்களின் கணக்கு விவரங்கள் இந்திய அரசுக்குப் பகிரப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close