[X] Close

முதலீட்டு சந்தையை ஊக்குவிக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி தீவிரம்: துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா தகவல்


  • kamadenu
  • Posted: 01 Jul, 2019 07:47 am
  • அ+ அ-

முதலீட்டு சந்தையை ஊக்குவிக்கும் வகையில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ரிசர்வ் வங்கி எடுத்துவருகிறது என்று ரிசர்வ் வங்கி துணை கவர்னர் வீரல் ஆச்சார்யா கூறிஉள்ளார்.

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக 2017 ஜனவரியில் நியமிக்கப்பட்ட வீரல் ஆச்சார்யாவின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் திடீரென்று தனிப்பட்ட காரணங்களுக்காக வரும் ஜுலை 23 தேதிக்குப் பிறகு பதவியில் தொடரமுடியாது என அறிவித்தார். ஏற்கெனவே அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது, வீரல் ஆச்சார்யா அரசின் மீது பல்வேறு விமர்சனங்களைப் பகிரங்கமாக குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விரைவில் பதவியை விட்டு விலகும் நிலையில், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நிதி ஆதாரங்களை முதலீட்டு சந்தைகள் வழங்கிவருகின்றன. இதனால் பேரியல் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாத மிக முக்கிய அங்கமாக இவை இருக்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அரசு பங்குகளில் பெருமளவிலான முதலீடு குவிந்திருக்கிறது.

இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள், வணிக வங்கிகள் மற்றும் சிறு முதலீட்டாளர்கள் எனப் பல தரப்பினரும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து முதலீட்டாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ரிசர்வ் வங்கி எடுத்துவருகிறது என்று அவர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close