[X] Close

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அந்நிய நிறுவன முதலீடு உயர்வு


5

  • kamadenu
  • Posted: 30 Jun, 2019 07:34 am
  • அ+ அ-

இந்திய பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு (எஃப்ஐஐ) கடந்த 6 மாதங்களில் மிக அதிக அளவுக்கு உயர்ந்துள்ளது.

பொருளாதார மந்த நிலை, பொதுத் தேர்தல் போன்ற ஸ்திரமற்ற சூழல் நிலவியபோதிலும் பங்குச் சந்தையில் அந்நிய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 1,141 கோடி டாலராகும். 2014-ம் ஆண்டில் அந்நிய நிறுவனங்கள் மேற்கொண்ட 991 கோடி டாலர் முதலீடுதான் இதுவரை அதிகபட்சமாக இருந்தது. 2018 டிசம்பர் வரையான 6 மாத காலத்தில் எஃப்ஐஐ மேற்கொண்ட முதலீடு 378 கோடி டாலராகும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறிய அந்நிய முதலீடு 6,810 கோடி டாலராகும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அந்நிய முதலீடு அபரிமிதமாக இல்லை. ஜனவரி மாதம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 753 கோடி டாலர் மதிப்பிலான பங்குகளை விற்றனர். ஆனால், முதலீடுகள் பிப்ரவரி மாதத்திலிருந்து வரத் தொடங்கின. பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான 5 மாத காலத்தில்தான் மிக அதிக அளவில் முதலீடுகள் வந்துள்ளன. ஐந்து மாதங்களில் மட்டுமே 1,150 கோடி டாலர் அளவுக்கு முதலீடு வந்துள்ளது. ஜூன் மாதம் மட்டும் 23 கோடி டாலர் அளவுக்கு பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் வரையான காலத்தில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலை காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டனர். பிற நாடுகளின் மத்திய வங்கிகள் மேற்கொண்ட அறிவிப்புகள் முதலீட்டுக்கு சாதகமாக இல்லாத சூழலில், அவர்களின் ஒரே தேர்வாக இந்திய பங்குச் சந்தைகள் மட்டுமே இருந்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஜனவரி 31-ம் தேதி அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி உயர்வை அறிவித்தது. இதைத் தொடர்ந்து சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இந்த காலகட்டத்தில் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவவே, அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்திய சந்தை பக்கம் திருப்பினர் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி முதல் ஜூன் வரையான காலத்தில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 24 சதவீத அளவுக்கு அதிகரித்தது. அதேசமயம் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு 1.09% ஸ்திரமடைந்தது. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியனவும், முதல் ஆறு மாதங்களில் ரூ.7,791 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர். இந்த ஆண்டு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 8 முதல் 9 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. டாலர் மதிப்பில் 9 முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close