[X] Close

நிதி மோசடி விவரங்களை வெளியிடுவதில் வங்கிகள் முறைகேடு


  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 10:46 am
  • அ+ அ-

நிதி மோசடிகளை தெரியப்படுத்துவதில் வங்கிகளே முறைகேடு செய்திருப்பதாக ரிசர்வ் வங்கி குற்றம் சாட்டியுள்ளது.

வங்கிகளில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் ஏற்படுத்தும் அதிர்ச்சியைவிட அந்த மோசடிகளை தெரியப்படுத்துவதில் வங்கிகள் செய்துள்ள முறைகேடுகள்தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த மோசடிகளை உரிய காலத்தில் அறிவிக்காமல் வங்கிகள் மறைத்திருப்பது தெரியவந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் வங்கிகள் வெளியிட்ட நிதிமோசடி சம்பந்தமான விவரங்களில், 90 சதவீத மோசடிகள் 2000 முதல் 2018 ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே நடந்திருக்கின்றன. மேலும் 40 சதவீத மோசடிகள் 2013-2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் நடந்துள்ளன.

மோசடி நிகழ்ந்ததற்கும் அது கண்டுபிடிக்கப்பட்ட காலகட்டத்துக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. மோசடி சம்பந்தமாக தற்போது வங்கிகள் அளித்திருக்கும் அறிக்கையில், பல மோசடிகள் நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்கின்றன. மற்ற வங்கிகளை ஒப்பிடுகையில் பொதுத் துறை வங்கிகளில் இவ்வகையான மோசடிகள் அதிக அளவில் நடந்துள்ளன.

வங்கிகள் முறையான ஆய்வுகளை மேற்கொள்ளும்பட்சத்தில் நிதி மோசடி செய்பவர்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close