[X] Close

50 பைசா நாணயம் செல்லும்


50

  • kamadenu
  • Posted: 29 Jun, 2019 10:48 am
  • அ+ அ-

50 பைசா நாணயம் உட்பட தற்போது புழக்கத்தில் இருக்கும் அனைத்து நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அவ்வப்போது அவற்றின் வடிவமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய நாணயங்களாக வருகின்றன. இந்நிலையில் அந்த நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற குழப்பங்கள் பொதுமக்கள், வணிகர்கள் மத்தியில் நீடித்து வந்தன.

இந்நிலையில், அரசு வெளியிடும் அனைத்து நாணயங்களையும் வணிகர்களும் பொது மக்களும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல், அனைத்து வங்கிகளும் பணப்பரிவர்த் தனையின்போது நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். 50 பைசா நாணயங்களும் செல்லும். அவற்றையும் யாரும் வாங்க மறுக்கக் கூடாது. அரசு வெளியிட்ட ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது விதிமீறலாகும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close