[X] Close

பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைக்கலாம்: ஆனந்த் மஹிந்திரா கருத்து


  • kamadenu
  • Posted: 27 Jun, 2019 08:15 am
  • அ+ அ-

ஆட்டோமொபைல் துறையில் ஜிஎஸ்டியைக் குறைத்தால் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் என மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்டோமொபைல் துறையைச் சார்ந்து பல்வேறு துறைகள் செயல்பட்டுவருகின்றன. அதில் வேலைவாய்ப்புகளும் கணிசமாக உள்ளன. எனவே ஆட்டோ மொபைல்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைக்கும்போது பல்துறை சார்ந்த வளர்ச்சி சாத்தியமாகும். வேலைவாய்ப்பு உருவாக்கம் ஊக்குவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சமீப காலங்களில் வாகன விற்பனை பெருமளவு குறைந்துவருகிறது. மே மாதத்தில்20 சதவீத விற்பனை குறைந்துள்ளது. இது பொருளாதார வளர்ச்சியிலும், வேலைவாய்ப்பிலும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

நாம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்தவன் என்பதற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே ஆட்டோமொபைல் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் காரணியாக இருக்கும். வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால் பல்வேறு பலன்களை பொருளாதாரத்தில் நாம் பார்க்கலாம் என்றார். ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறை கூட்டமைப்பு சார்பாகவும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close